யோவேல்

  1. யோவேல் - "கர்த்தருடைய நாள் பற்றிய எச்சரிக்கை; ஆவியின் வெள்ளம்"

     

    1.அமைப்பு

    இது கி.மு.835 அல்லது கி.மு.312 எழுதப்பட்டடிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. மூப்பர்கள் ஆளுகைசெய்து கொண்டிருந்தார்கள் என்ற குறிப்பை யோவேலின் புத்தகத்திலே நாம் வாசிக்கிறோம். மேலும் யூதர்கள் கிரேக்கர்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்டுப் போயிருந்தார்கள் என்றும் இந்தப் புத்தகம் சொல்கிறது.

    யோவேல்-1: 2,14 முதியோரே, இதைக் கேளுங்கள், தேசத்தின் சகல குடிகளே, செவிகொடுங்கள், உங்கள் நாட்களிலாவது உங்கள் பிதாக்களின் நாட்களிலாவது இப்படிப்பட்டது சம்பவித்ததுண்டா? 14. பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள், மூப்பரையும் தேசத்தின் எல்லாக் குடிகளையும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

    யோவே-2: 16 ஜனத்தைக் கூட்டுங்கள், சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள், முதியோரைச் சேருங்கள், பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள், மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப் புறப்படுவார்களாக.

    யோவே-3: 6 யூதாவின் குமாரரையும் எருசலேமின் குமாரரையும் அவர்களுடைய எல்லைகளுக்குத் தூரமாக்கும்படிக்கு, கிரேக்கரிடத்தில் விற்றுப் போட்டீர்கள்.

    ஒருபுறம் இப்படியிருக்க, பாபிலோனால் சிறையாக்கிக் கொண்டுசெல்லப்படுதல் இனிமேல்தான் நடக்கவிருக்கிறது என்பதைக் குறிப்பது போன்ற வார்த்தைகளும் இதிலே வருகிறது.

    யோவே-1: 15 அந்த நாளினிமித்தம் ஐயோ! கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது, அது சங்காரம்போலச் சர்வ வல்லவரிடத்திலிருந்து வருகிறது.

    யோவே-2: 1-9 சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள், தேசத்தின் குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவார்கள், ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது. 2. அது இருளும் அந்தகாரமுமான நாள், அது மப்பும் மந்தாரமுமான நாள், விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல எராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும், அப்படிப்பட்டது முன் ஒருகாலத்திலும் உண்டானதுமில்லை, இனித் தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டாவதுமில்லை. 3. அவைகளுக்கு முன்னாக அக்கினி பட்சிக்கும், அவைகளுக்குப் பின்னாக ஜுவாலை எரிக்கும், அவைகளுக்கு முன்னாகத் தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்தரத்தைப்போலவும் இருக்கும், அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை. 4. அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலை ஒத்தது, அவைகள் குதிரை வீரரைப்போல ஓடும். 5. அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சல்போலவும், செத்தைகளை எரிக்கிற அக்கினிஜுவாலையின் இரைச்சல்போலவும், யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இரைச்சல்போலவும், பர்வதங்களுடைய சிகரங்களின்மேல் குதிக்கும். 6. அவைகளுக்கு முன்பாக ஜனங்கள் நடுங்குவார்கள், எல்லா முகங்களும் கருகிப்போகும். 7. அவைகள் பராக்கிரம சாலிகளைப் போல ஓடும், யுத்தவீரரைப்போல மதிலேறும். வாிசைகள் பிசகாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும். 8. ஒன்றைஒன்று நெருக்காது, ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும், அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம்படாமற்போகும். 9. அவைகள் பட்டணம் எங்கும் செல்லும், மதிலின்மேல் ஓடும், வீடுகளின்மேல் ஏறும், பலகணிவழியாய்த் திருடனைப்போல உள்ளே நுழையும்.

    இன்னும் தேவாலயம் இருந்துகொண்டிருந்தது என்றும் இந்தப் புத்தகத்தில குறிப்பிடப்பட்டடிருக்கிறது.

    யோவே-1: 9 போஜனபலியும் பானபலியும் கர்த்தருடைய ஆலயத்தை விட்டு அற்றுப்போயின, கர்த்தரின் ஊழியக்காரராகிய ஆசாரியர்கள் துக்கிக்கிறார்கள்.

    யோவே-1: 13-14,16 ஆசாரியர்களே, இரட்டுடுத்திப் புலம்புங்கள், பலிபீடத்தின் பணிவிடைக்காரரே, அலறுங்கள், என் தேவனுடைய தொண்டரே, நீங்கள் உள்ளே பிரவேசித்து இரட்டுடுத்தவர்களாய் இராத்தங்குங்கள். உங்கள் தேவனுடைய ஆலயத்தில் போஜனபலியும் பானபலியும் செலுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது. பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள், மூப்பரையும் தேசத்தின் எல்லாக் குடிகளையும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள். 16. நம்முடைய கண்களைவிட்டு ஆகாரமும், நம்முடைய தேவ ஆலயத்தைவிட்டுச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நீக்கப்படவில்லையோ?

    யோவே-2: 17 கர்த்தரின் பணிவிடைக்காரராகிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது: கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடாதிரும், உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக.

    தீரு, சிதோன், பெலிஸ்தியா மற்றும் எகிப்து தேசங்கள் இஸ்ரவேலின் சத்துருக்களாக இருந்தார்கள் என்பதை யோவேல்-3: 4-9 வசனங்கள் அறிவிக்கின்றன. இது 2நாளாகமம்-21: 8 முதல் 16 வசனங்களுடன் ஒத்து வருகிறதாகவும் தோன்றுகிறது. இது 7 வயது சிறுவனாகிய யோவாஸ் யூதா வில் ராஜாவாக ஆட்சிசெய்த நாட்களாக இருந்திருக்கலாம்.

    யோவாஸ் மிகவும் சிறியவனாக இருந்ததால், மூப்பர்கள் முக்கிய பொறுப்பிலிருந்து வழிநடத்திச் சென்றார்கள். எனவே அதிகமாக மூப்பர்களைக்குறித்த குறிப்பு இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கருதுகிறோம். இது உண்மையாக இருக்குமெனில், கி.மு.870 முதல் 860ற்கு இடைப்பட்ட காலத்தில் இந்தப் புத்தகம் கணக்கிடப்படலாம்.

    2. எழுதிய நபர்: யோவேல்:

    யோவேல் யார் என்பதைக்குறித்த எந்தக்குறிப்பும் நமக்குக் கொடுக்கப் படவில்லை. யோவேல் என்ற பெயருக்கு யாவே தான் தேவன் என்று அர்த்தமாகும். தான் பெத்துவேலின் மகன் என்று யோவேல் தன்னை அறிமுகப்படுத்துகிறார்.

    யோவேல்-1: 2 பெத்துவேலின் குமாரனாகிய யோவேலுக்கு உண்டான கர்த்தருடைய வசனம். யோவேல், அடிக்கடி ஆசாரியத்துவத்தைக் குறித்துக் குறிப்பிடுவதால், இவர் யூதா தேசத்தில் ஒரு ஆசாரியனனாக இருந்திருக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள். நுன்கு படித்த ஒரு நபராகவும் யோவேல் காணப்படுகிறார். அவர் எழுதியிருக்கிற முறை அவருடைய கல்வியறிவை வெளிப்படுத்துகிறது.

    3. செய்தி:

    ஓசியாவின் புத்தத்தில், தேவனுக்கும் இஸ்ரவேலுக்குமிடையே கணவன் மனைவி என்ற பந்தத்தைக்குறித்து விவரிப்பதுபோல, யோவேலின் புத்தகம் வெட்டுக்கிளிகளைப்போல வந்துகொண்டிருக்கும் தேவனுடைய அழிவைக்குறித்து விவரிக்கிறது. எபிரேயத்தில், யோவேலின் புத்தம் 4 அதிகாரங்களாக உள்ளது. அவர்கள் அதிகாரம் 2: 28-32 தனி அதிகாரமாகக் காண்பித்திருக்கிறார்கள். அதேபோல அதிகாரம்-2: 17-18 வசனங்கள் 3ஆம் நபர் தன்மையிலிருந்து 2ஆம் நபர் தன்மைக்கு மாறுகிற வேற்றுமையில் இருக்கிறது.

    யோவே-2: 17-18 கர்த்தரின் பணிவிடைக்காரராகிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது: கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடாதிரும், உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக. 18. அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங் கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார்.

    புதியஏற்பாட்டில் யோவேலின் புத்தகம் 28 முறை பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

    சில உதாரணங்கள்: (மத்தேயு, அப்போஸ்தல நடபடிகள், ரோமர், வெளிப்படுத்தின விசேஷம்...)

    மத்-24: 29 அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.

    யோவே-2: 31 கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

    அப்-2: 16-21 தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப் பட்டபடியே இது நடந்தேறுகிறது. 17. கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்கதரிசனஞ் சொல்லுவார்கள், உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள், உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள், 18. என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்கதரிசனஞ் சொல்லுவார்கள். 19. அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழப்பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். 20. கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். 21. அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார். (யோவேல் 2: 28-32ல் இதைப் பார்க்கிறோம்.)

    ரோம-10: 13 கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.

    யோவே-2: 32 அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்.

  1. யோவேலில் காணப்படும் சில சிறந்த பகுதிகள்:

    †யோவேல்-2: 12-13 ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 13. நீங்கள் உங்கள் வஸ்திரங்களை அல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள், அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர், அவர் தீங்குக்கு மனஸ்தாபப் படுகிறவருமாய் இருக்கிறார். (தண்டனைத்தீர்ப்பை ஆசீர்வாதமாக மாற்றுவதற்கு மனந்திரும்புதலின் வல்லமை. இதுதான் இந்தப் புத்தகத்தின் அச்சாணியாக இருக்கிறது)

    †யோவேல்-2: 25-27 நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன். 26. நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள், என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. 27. நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறெருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள், என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. (இழந்ததை தேனவன் ஒருவரே திரும்பப் பெற்றுக்கொடுக்க வல்லவராக இருக்கிறார்)

    †யோவேல்-28-32 அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள், உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். 29. ஊழியக்காரர்மேலும் ஊழியக் காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன். 30. வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன். 31. கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். 32. அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான், கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர் களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும். (ஆவியானவர் ஊற்றப் படுதலைக்குறித்த வாக்குத்ததம்)

    †யோவேல்-3: 10 உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள், பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக. (தேசங்களுக்கு யுத்தத்தைக்குறித்த அறிவித்தல். ஏசா-2: 4 அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள், ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.)

    †யோவேல்-3: 13 பயிர் முதிர்ந்தது, அரிவாளை நீட்டி அறுங்கள், வந்து இறங்குங்கள், ஆலை நிரம்பியிருக்கிறது, ஆலையின் தொட்டிகள் வழிந்தோடுகிறது, அவர்களுடைய பாதகம்பெரியது. (இந்தக்காலத்தின் முடிவில் நடை பெறவிருக்கிற அறுவடை. வெளி-15: 14-20).

    யோவேலின் தொகுப்பு:

    (மொத்தம் 3 அதிகாரங்கள் உள்ளன, 2 தொகுப்புகளாகப் பிரிக்கலாம்.)

    1. அதிகாரங்கள் 1 முதல் 2: 17 வரை:

    அ. இயற்கை அழிவு: (1: 1-20)

    1. வெட்டுக் கிளியால் வரும் அழிவு (1: 4)
    2. பஞ்சமும் வறட்சியும் (1: 17-20)
    3. அக்கின பட்சித்தல் (1: 19-20)

    ஆ. புலம்பி அழுவதற்குரிய அழைப்பு(1: 13-20)

    முதலாவது அதிகாரத்தில் வேளாண்மை ரீதியாக தேசத்திற்கு வரவிருந்த அழிவைக்குறித்தும், 2ஆவது அதிகாரத்தில் இராணுவ ரீதியாக தேசத்திற்கு வரவிருந்த அழிவைக்குறித்தும் தேவன் எச்சரித்தார். ஆபத்து, அல்லது அழிவைக்குறித்த எச்சரிப்பு நம்மை மனந்திரும்புவதற்கு அழைப்பதாக, எதிர்கொள்வதற்கு ஆயத்தப் படுத்துவதற்காக இருக்கிறது. அழிப்பது அல்ல தேவனுடைய நோக்கம், அழைப்பதும், ஆயத்துப் படுத்துவதுமே தேவனுடைய நோக்கமாக இருக்கிறது. அதிலே தேவனுடைய இருதயத்தை நாம் பார்க்கிறோம்.

    இ. பாபிலோனின் படையெடுப்பு(2: 1-9 பாபிலோன் யூதாவுக்கு விரோதமாக வருதல்-70 வருட சிறைபிடிப்பு)

    ஈ. மனந் திரும்புதலுக்கான அழைப்பு(2: 12-17)

    1. அதிகாரம் 2: 18 முதல் 3: 21 வரை: பராக்கிரமமுள்ள ஒரு தேவனாக:

    அ. தேவ படையெடுப்பு (2: 18-27)

    ஆ. ஆவியானவரின் ஊற்றப்படுதல் (2: 28-32)

    இ. தேனுடைய நியாயத்தீர்பபு (3: 1-17)

    ஈ. தேவ வாசம்பண்ணுதல் (3: 18-21)

    யோவேலின் புத்தகத்தில் கர்த்தருடைய நாளைக்குறித்து 3 விதங்களைப் பார்க்கிறோம்:
    1. யோவேல்-1: 15 அந்த நாளினிமித்தம் ஐயோ! கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது, அது சங்காரம்போலச் சர்வ வல்லவரிடத்திலிருந்து வருகிறது. (வேளாண்மையில் அழிவு வருதல்)
    2. யோவேல்-2: 1, 11 சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள், தேசத்தின் குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவார்கள், ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது. 11. கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார், அவருடைய பாளயம் மகாபெரியது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது, கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும், அதைச் சகிக்கிறவன் யார்? (இது பாபிலேனின் படையெடுப்பைக் குறித்து அறிவிக்கிறது)
    3. யோவேல்-3: 14 நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள் திரள்திரளாய் இருக்கிறார்கள், நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது. (இது இஸ்ரவேல் ஜனத்தின்மீது தேவனுடைய ஆசீர்வாதமும், அந்திக்கிறிஸ்துவின் ராஜ்யத்தின்மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பும் வெளிப்படும் நாளாகும். யோவே-2: 2,11 அது இருளும் அந்தகாரமுமான நாள், அது மப்பும் மந்தாரமுமான நாள். 11. கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும். (அந்திக்கிறிஸ்துவுக்கும் அவனுடைய ஆட்களுக்கும்).

    இஸ்ரவேல் தேசத்திற்கோ: (யோவேல்-3: 16-18 கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார், வானமும் பூமியும் அதிரும், ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார். 17. என் பரிசுத்த பர்வதமாகிய சீயோனிலே வாசமாயிருக்கிற நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள், அப்பொழுது எருசலேம் பரிசுத்தமாயிருக்கும், அந்நியா; இனி அதைக் கடந்துபோவதில்லை. 18. அக்காலத்தில் பர்வதங்கள் திராட்சரசத்தைப் பொழியும், மலைகள் பாலாய் ஓடும், யூதாவின் ஆறுகள் எல்லாம் பிரவாகித்து ஓடும், ஒரு ஊற்று கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டுச் சித்தீம் என்னும் பள்ளத்தாக்கை நீர்ப்பாய்ச்சலாக்கும்.

    கர்த்தருடைய நாளைக்குறித்த 3 கோணப் புரிந்துகொள்ளுதல்:
    1. யோவேலின் நாட்களிலே பகுதியளவு நிறைவேறியவைகள்.
    2. மகாஉபத்திரவத்தின் நாட்களில் நிறை வேரவிருப்பவைகள் (வெளிப்படுத்தின விசேஷத்தில் வருகிற தேவனுடைய 3 குழுவாக 21 நியாயத்தீர்ப்புகள். 7 முத்திரை உடைக்கப்படுதல், 7 எக்காளங்கள் ஊதப்படுதல், 7 கோபக்கலசங்கள் ஊற்றப்படுதல்)
    3. நிறைவான நிறைவேறுதல்: கர்த்தருடைய நாளை முடிவிற்குக் கொண்டுவருகிற வெள்ளைசிங்காசன நியாயத் தீர்ப்பின்போது.

    கர்த்தருடைய நாள் என்பதை கடைசி நாட்கள் அல்லது கடைசிநாள் என்றும் வேதம் அழைக்கிறது. பொதுவாக நாட்களில் கடைசிநாளைக் குறிக்கும் 3 பகுதிகளை நாம் பார்க்கலாம்.

    யோவா-6: 39 எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.

    1. ஒரு வாரம் - 7 நாட்கள்: 7ஆவது நாள் கடைசி நாளாகும்.
    2. ஒரு மாதம்- 30 (31) நாட்கள்: 30ஆவது (31) நாள் கடைசி நாளாகும்.
    3. ஒரு ஆண்டு- 365 நாட்கள்: டிசம்பர் 31 கடைசி நாளாகும்.
    • நாம் வாழ்கிற இந்த உலகத்திற்கு படைக்கப்பட்ட முதல்நாளிலிருந்து (ஆதி-1: 5 முதலாம் நாள் ஆயிற்று), நித்தியம் என்ற ஒன்று ஆரம்பிக்கப் படுவதற்குமுன் முந்தையநாள், அதாவது நேரமும், நாளும் முடிவுக்குவருகிற நாள் கடைசிநாளாகும்.
    • ஒரு நபருக்கு, பிறந்தநாளிலிருந்து அவர் மரிக்கிற நாள் கடைசிநாளாகும்.