சங்கீதம்



* கர்த்தரை நம்பி, அவரைப் புகழ்ந்து பாடுதல். *




என் ஆத்துமாவே கர்த்தரைத் துதியுங்கள்



1. அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.

2. நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

3. பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.

4. அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.

5. யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.

6. அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.

7. அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்.

8. குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார்.

9. பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார்.

10. கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்பண்ணுகிறார். அல்லேலூயா.



146
home



வாழ்நாள் முழுவதும் இறைவனைத் துதிக்க வேண்டும் என்று சங்கீதக்காரர் அழைக்கிறார். இளவரசர்கள் மீது நம்பிக்கை வைப்பதற்கு எதிராக அவர் எச்சரிக்கிறார். கர்த்தர் நீதியை நிறைவேற்றுவது, உணவு கொடுப்பது, கைதிகளை விடுவிப்பது மற்றும் வெளிநாட்டவர்களைக் கண்காணிப்பது பற்றி அவர் பேசுகிறார்.