சங்கீதம்



* கர்த்தரின் இரட்சிப்பின் மகிழ்ச்சி. *




கர்த்தர் சீயோனின் மகிழ்ச்சியையும் மீட்டெடுத்தபோது சங்கீதக்காரன் விவரிக்கிறார்.



1. சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது, சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.

2. அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

3. கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்.

4. கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத் திருப்பும்.

5. கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.

6. அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.



126
home



கர்த்தர் சீயோனின் அதிர்ஷ்டத்தையும் அது தந்த மகிழ்ச்சியையும் மீட்டெடுத்தபோது சங்கீதக்காரன் விவரிக்கிறார். அவர் மேலும் மறுசீரமைப்பிற்காக ஜெபம் செய்கிறார், பாலைவனத்தில் உள்ள நீரோடைகளுடன் ஒப்பிடுகிறார், மேலும் மகிழ்ச்சியில் அறுவடை செய்வதைப் பற்றி பேசுகிறார்.