சங்கீதம்



* துன்பத்தில் இருக்கும் போது தேவனிடம் மன்றாடுதல். *




துயரத்தில் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறான்



1. என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.

2. கர்த்தாவே, பொய் உதடுகளுக்கும் கபடநாவுக்கும் என் ஆத்துமாவைத் தப்புவியும்.

3. கபடநாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?

4. பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.

5. ஐயோ! நான் மேசேக்கிலே சஞ்சரித்தது போதும், கேதாரின் கூடாரங்களண்டையிலே குடியிருந்ததும் போதும்!

6. சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடத்தில் என் ஆத்துமா குடியிருந்ததும் போதும்!

7. நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்.



120
home



சங்கீதக்காரன் தன் துயரத்தில் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறான், பொய் உதடுகளிலிருந்து விடுவிக்கப்படுவதைப் பற்றி பேசுகிறான். அவர் சமாதானத்திற்காக இருக்கும் போது போருக்காக இருப்பவர்கள் மத்தியில் வசிப்பதைப் பற்றி புலம்புகிறார்.