சங்கீதம்



* கர்த்தருக்கு நன்றி செலுத்தி, அவரைப் புகழ்ந்து பாடுதல். *




ஒருமைப்பாட்டின் உறுதிமொழி ; நன்றி செலுத்தும் சங்கீதம்



1. பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.

2. மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.

3. கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.

4. அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

5. கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.



100
home



உறுதியான அன்பு மற்றும் நீதியைப் பாடுவதைப் பற்றி தாவீது பேசுகிறார். அவர் நேர்மையுடன் நடப்பதாகவும், பயனற்ற விஷயங்களைத் தன் கண்களுக்கு முன்பாக வைக்கக்கூடாது என்றும் சபதம் செய்கிறார். தேசத்திலுள்ள எல்லாப் பொல்லாதவர்களையும் அழித்துவிடுவதைக் காலைக்குக் காலைப் பேசுகிறார்.