நாகூம்

நாகூம் - "நினிவே அழிவின் தீர்க்கதரிசனம்"

 

1. அமைப்பு:

நாகூமின் புத்தகமும், யோனாவின் புத்தகம் என்று அழைக்கப்படத்தக்க அளவுக்கு ஒரு அருமையான புத்தகமாக இருக்கிறது. யோனாவுக்குப் பிறகு சுமார் 250 ஆண்டுகள் கழித்து யோனா புத்தகத்தின் தொடர்ச்சியாக இந்தப் புத்தகம் இருக்கிறது. கி.மு. 663ல் தேபேஸ் என்ற நோ அம்மோனின் வீழ்ச்சிக்குப் பிறகு, கி.மு.612ல் நினிவேயின் வீழ்ச்சிக்குமுன் இந்தத் தீர்க்கதரிசனம் அறிவிக்கப்பட்டது.

நாகூம்-3: 8 நதிகள் மத்தியிலிருந்த நோ அம்மோனைப் பார்க்கிலும் நீ சிரேஷ்டமோ? (சிறப்பான நகரமோ?) அதைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது, சமுத்திரம் அதின் அரணும், சமுத்திரக்கால் அதின் மதிலுமாயிருந்தது (அதுவே விழுந்துவிட்டது, நீ எம்மாத்திரம் என்று தேவன் சொன்னார்).

இது முழுமையாக நினிவேயோடு தொடர்புடையதாக இருக்கிறது. மிகுந்த பாதுகாப்பும் போதுமான ஆகார சேகரிப்பும் உடைய ஒரு தலைநகரமாக நினிவே இருந்தது. குறைந்தது 18 ஆண்டுகளுக்குத் தேவையான ஆகாரம் இவர்களிடம் இருப்பிலிருந்தது. எனவே இங்கிருந்த மக்களுக்கு உணவைக் குறித்து கவலையில்லை. இது ஒரு மிகப்பெரிய இடமாகும். இங்கே சனகெரிப் ராஜாவுடைய தெற்கு அரண்மனை 71 அரைகளும் 5 ஏக்கர் பரப்பளவில் இருந்ததாம். இந்த நகரத்தினூடாக டைக்ரீஸ் நதி பாய்ந்துசென்றது. எனவே தண்ணீர் பிரச்சினையும் இவர்களுக்கு இல்லை. இந்த நகரத்தின் மதில் 8 மைல் சுற்றளவில், 15 வாசல்களுடன், 100 அடி உயரமானதாக, 3 இரதங்கள் ஓடத்தக்க அளவுக்கு 50 அடி அகலமானதாக இருந்தது. இந்த மதில்களின்மேலிருந்த கோபுரங்கள் 200 அடி உயரமானதாக இருந்தன. 150 அடி ஆழத்திற்கு சுற்றிலும் அகலியும், அதற்கடுத்து 2007 அடி இடைவெளியில் அடுத்த உள்மதிலும் இருந்தது. எனவே எதிரிகளின் தாக்குதலைக்குறித்த பயமும் இவர்களுக்கு இல்லை. கி.மு. 760ல் யோனா நினிவேக்குப் பிரசங்கித்தார்.

யோனாவின் நாட்களில் மாபெரும் மனம்திரும்புதலின் எழுப்புதலை அனுபவித்த நகரம் இப்பொழுது சில நூறு ஆண்டுகள் கழித்து மிகவும் பின்மாற்றத்திற்குள் சென்றிருந்த நேரம் இது. மிகவும் கொடூரமானவர்களாக அக்கிரமத்தில் மூழ்கிப்போயிருந்தார்கள். நினிவேக்கு வரவிருந்த அழிவைக்குறித்த விபரமான குறிப்புகளை நாகூம் கொடுக்கிறார். மனாசேயை சிறைபிடிப்பதற்காக தேவன் அசீரியாவை எருசலேமுக்கு வரவைத்தார். அவர்கள் மனாசேயை சிறைப்பிடித்து, சங்கிலிகளால் கட்டி பாபிலோனுக்குக் கொண்டுசென்றார்கள் என்று 2 நாளாமத்தில் வாசிக்கிறோம்.

2நாள்-33: 11 ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார், அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச் சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

நினிவே அசீரியாவின் தலைநகர் என்பது நமக்குத் தெரியும். மனாசே சிறைபிடித்துக் கொண்டுசெல்லப்பட்ட இந்த நாட்களில், அல்லது அவன் பாபிலோனிலிருந்து திரும்பிவந்த நாட்களில் நாகூம் நினிவேக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் உரைத்திருக்க வேண்டும். இந்த நாட்களில் அசீரியாவின் ராஜாக்கள், எதிரிகளுடைய தோலை உரித்தல், தொண்டையை அறுத்தல், எதிரிகளை அக்கினியால் சுட்டெரித்தல் போன்ற கொடூரமான செயல்களைச் செய்தார்கள். நாகூம் தீர்க்கதரிசனம் உரைத்த இந்த நேரத்தில் அசீரியா உலக வல்லரசாக இருந்துகொண்டிருந்தது. அவருடைய வார்த்தைகளில் சிலவற்றைக் கவனியுங்கள்.

நாகூம்-2: 1 சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான், அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல்பண்ணு, அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து.

நாகூம்-3: 14 முற்றிகைக்குத் தண்ணீர் மொண்டு வை (டைக்ரீஸ் நதி), உன் அரண்களைப் பலப்படுத்து, சேற்றிலே போய்க் களிமண்ணை மிதி. சூளையைக் கெட்டிப்படுத்து.

இப்படிச் சொல்வதன்மூலம், நீ எவ்வளவு பலமான பாதுகாப்பைக் கொண்டிருந்தாலும், தேவனுக்கு முன்பாக அது ஒன்றுமில்லை, நான் உன்னை அழிப்பதை எதுவும் தடுக்கமுடியாது என்று தேவன் அறிவித்தார். நாகூம் தீர்க்கதரிசனம் உரைத்த 50 ஆண்டுகளுக்குள், இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறுதலுக்குள் வந்தது. கி.மு. 612ல் பாபிலோனியர்கள், மேதியர்கள் மற்றும் சேய்த்தியர்களின் கையில் நினிவே விழுந்தது. இந்த நகரம் பிடிக்கப்பட்ட 3ஆவது வருடத்தில் பலத்த மழைவந்து, பெரு வெள்ளம் புரண்டுவந்ததால், இரண்டு பெரிய மதில்களும் இடிந்துவிழுந்தது. மதில்கள் இடிந்து விழுந்ததால், பாபிலோனியர்கள் எளிதில் நினிவேக்குள் நுழைந்து அதை அழித்தார்கள்.

நாகூம்-1: 8 ஆனாலும் நினிவேயின் ஸ்தானத்தை, புரண்டுவருகிற வெள்ளத்தினால் சர்வ சங்காரம்பண்ணுவார், இருள் அவர் சத்துருக்களைப் பின்தொடரும்.

தொடர்ந்து இந்த வீழ்ச்சிக்கு 200 ஆண்டுகள் கழித்து, ஸெனொஃபோன் என்பவன், 10,000 கிரேக்க வீரர்களுடன் பெர்சியாவுக்குச் செல்வதற்குரிய தன்னுடைய 1500 மைல் பயணத்தின்போது, இந்தப் நகரத்தை முற்றிலும் அழித்தான். மேலும் இதனுடைய அழிவின் 300 ஆண்டுகளுக்குப் பிறகு மகாஅலெக்ஸாண்டர் இதற்கு அருகாமையில் யுத்தம்செய்தபோது, நினிவே என்ற ஒரு நகரம் அங்கே இருந்ததற்கான அறிகுறியே இல்லாத அளவுக்கு அது மறக்கப்பட்டுப் போயிருந்தது. இப்பொழுது கி.பி. 1846ல் அது மீண்டும் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.

2. நாகூம்:

நாகூம் என்றால் எபிரேயத்தில் ஆறுதல் என்று அர்த்தமாகும். இவர் எங்கேயிருந்து வந்தார் என்ற குறிப்பு நமக்குக் கொடுக்கப்படவில்லை. நாகூம் 1: 1ல் எல்கொசானாகிய நாகூம் என்று மாத்திரம் சொல்லப்பட்டிருக்கிறது.

3.செய்தி:

நாகூமின் செய்தி 10 வடகோத்திரங்களுக்கு அல்ல, மாறாக யூதாவுக்குக்குக் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு ஆறுதலையும் தேறுதலையும் கொடுக்கும் செய்தியாக இது சொல்லப்பட்டது. இந்தப் புத்தகத்திலே நினிவே வீழ்ச்சியடையும் என்ற செய்தி தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. நினிவேயின் நியாயத்தீரப்புக்கான 3 காரணங்களை நாகூம் கொடுக்கிறார்:

  1. அசீரிய இராணுவத்தினரின் மனிதாபிமானமற்ற கொடூரச்செயல்கள்
  2. நகரத்தின் துன்மார்க்கங்கள்
  3. ஒருமுறை மனந்திரும்பியும் தேவனைவிட்டு விலச்சென்றது.

அதிகாரம் 1ன் முதல் 8 வசனங்களில் தேவனுடைய நியாயத்தீர்ப்பிற்கான பொதுக்கொள்கைகளை நாகூம் முன்வைக்கிறார். தேவனுடைய நியாயத்தீர்ப்பானது, அவருடைய அன்பின் முக்கியப்பகுதியாக இருக்கிறது. தமது மக்கள்மீதுள்ள அன்பினிமித்தம், தமது மக்களுக்காக, குறித்தநேரம் வரும்போது, அவர்களுடைய சத்துருக்களை தேவன் நியாந்தீர்க்கிறார்.

2பேது-3: 9-14 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமை உள்ளவராயிருக்கிறார். 10. கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும், அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம். 11. இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிற படியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்! 12. தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள், அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம். 13. அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம். 14. ஆகையால், பிரியமானவர்களே,

இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழை இல்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.

நாகூமின் தொகுப்பு:

(மொத்தம் 3 அதிhரங்கள், 3 பகுதிகாளகப் பிரிக்கலாம்)

  1. அதிகாரம் 1: 1-14 தேவனுடைய தன்மையும் நினிவேயும். (தேவனைக்குறித்த அதிகமான காரியங்களை இந்தப் பகுதி கற்றுக்ககொடுக்கிறது)
  2. எரிச்சலுள்ள தேவன் (1: 2 நம்மீது அல்ல, மாறாக நமக்காக எரிச்சலுள்ளவர்)
  3. நீதியைச் சரிக்கட்டுகிறவர் (1: 2)
  4. சத்துருக்கள்மீது உக்கிரக் கோபமுள்ளவர் (1: 2)
  5. நீடிய சாந்தமுள்ளவர் (1: 3)
  6. மிகுந்த வல்லமையுள்ளவர் (1: 3)
  7. இயற்கையைக் கட்டுப்படுத்தி இயக்குபவர் (1: 3-6)
  8. நல்லவர் (1: 7)
  9. தம்மை நம்புபவர்களுக்கு அரணான கோட்டை (1: 7)
  10. அதிகாரம் 1: 15 முதல் 2: 12 தேவனுடைய சமாதானமும் நினிவேயும்:
  11. யாக்கோபுக்கு சமாதானம் (ஏசா-52: 7 சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரீகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன).

நாகூம்-2: 2 கர்த்தர் யாக்கோபின் மகிமையைத் திரும்பி வரப்பண்ணுவதுபோல், இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பி வரப்பண்ணுவார்.

  1. நினிவே அழிக்கப்படும் என்பதைத் தீர்க்கமாக அறிவித்தார். (2: 7).
  2. நினிவேயின் தோற்கடிக்கப்படுதல் (2: 8-12)

III. அதிகாரம் 2: 13 முதல் 3: 19 தேவனுடைய நோக்கமும் நினிவேயும்:

  1. இரத்தம்சிந்தும் நகரம்
  2. பொய்யின் நகரம்
  3. திருடுகிற நகரம்
  4. வேசித்தனத்தின் நகரம்
  5. சூனியங்களின் நகரம்
  6. நினிவேக்கு வரும் மோசமான அழிவு (3: 15-19)

நாகூம்-3: 15-19 அங்கே அக்கினி உன்னைப் பட்சிக்கும், பட்டயம் உன்னைச் சங்கரிக்கும், அது பச்சைக் கிளிகளைப்போல் உன்னைப் பட்சித்துப்போடும், உன்னைப் பச்சைக் கிளிகளத்தனையாக்கிக் கொள், உன்னை வெட்டுக் கிளிகளத்தனையாக்கிக் கொள். 16. உன் வர்த்தகரை வானத்து நட்சத்திரங்களிலும் அதிகமாக்கினாய், இந்தப் பச்சைக்கிளிகள் பரவிப்பறந்துபோகும். 17. உன் மகுடவர்த்தனர் வெட்டுக்கிளிகளுக்கும், உன் தளகர்த்தர் பெருங்கிளிகளுக்கும் சமானமாயிருக்கிறார்கள், அவைகள் குளிர்ச்சியான நாளில் வேலிகளில் பாளையமிறங்கி, சூரியன் உதித்தமாத்திரத்தில் பறந்துபோம், பின்பு அவைகள் இருக்கும் இடம் இன்னதென்று தெரியாது. 18. அசீரியா ராஜாவே, உன் மேய்ப்பர்கள் உறங்குவார்கள், உன் பிரபலஸ்தர் படுத்திருப்பார்கள், உன் ஜனங்கள் பர்வதங்களின்மேல் சிதறியிருக்கிறார்கள், அவைகளைக் கூட்டிச் சேர்ப்பவன் இல்லை. 19. உன் நொறுங்குதலுக்குப் பரிகாரம் இல்லை, உன் காயம் கொடியது, உன் செய்தியைக் கேட்பவர் யாவரும் உன்போpல் கைகொட்டுவார்கள், உன் பொல்லாப்பு எந்நேரமும் யார்பேரிலேதான் பாயாமற்போயிற்று?

முக்கிய வசனம்:

நாகூ-1: 7 கர்த்தர் நல்லவர், இக்கட்டுநாளிலே அரணான கோட்டை, தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.