எரேமியா

எரேமியா - "யூதாவின் அழிவுக்கு எச்சரிக்கை; புதிய உடன்படிக்கை"

 

முகவுரை:

எரேமியா தீர்க்கதரிசி 2 புத்தகங்களை எழுதியிருக்கிறார். ஒன்று எரேமியாவின் புத்தகம், மற்றொன்று புலம்பல். தான் இளைஞனாக இருந்தபோது எரேமியா தன் ஊழியத்தை ஆரம்பித்தார். எரே-1: 6 அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன், சிறுபிள்ளையாய் இருக்கிறேன் என்றேன். தீர்க்கதரிசிகள் அனைவரிலும் எரேமியா ஒரு தனிதன்மை வாய்ந்த நபராக இருக்கிறார். இவர் பிரபல்யமானவராகவோ, விசித்திரமானவராகவோ, பலரால் ஆச்சரியப் படத்தக்கவராகவோ, மிகவும் வெற்றிக்கேதுவான வளர்ச்சியடைந்த நபராகவோ இல்லை. ஆனால், தீர்க்கதரிசிகள் அனைவரிலும் இவர் அதிகமாக உறுதியாக நின்ற தீர்க்கதரிசியாக இருக்கிறார். இருதயத்தை உடைக்கிற செய்திகளை உடைய, உடைந்த இருதயமுள்ள ஒரு தீர்க்கதரிசியாக எரேமியா இருந்தார். யோசியா ராஜாவின் 13ஆவது வருடத்தில் எரேமியா தன்னுடைய ஊழியத்தை ஆரம்பித்தார். யோசியா ராஜாவைத் தொடர்ந்து, யோயாக்கீம், யோயாக்கீன் மற்றும் சிதேக்கியா ராஜாக்களின் நாட்களிலும் எரேமியா ஊழியம்செய்தார். இவருடைய தகப்பன் ஒரு ஆசாரியராவார். அவர் பெயர் இல்கியா. இவர் தேவனுடைய ஆலயத்திலே, தேவ வேதப்புத்தகத்தைக் கண்டெடுத்து, ஒரு வேதாகம எழுப்புதல் வருவதற்குக் காரணமாக இருந்தார்.

அழிவைக்குறித்த செய்தியை எரேமியா 40 வருடங்களுக்கு மேலாக யூதா ஜனங்களுக்குப் பிரசங்கித்தார். அவர்களோ இருதயக்கடினமும். வணங்காக் கழுத்துள்ளவர்களுமாக இருந்தார்கள். ஆனால் இவரோ மனந்தளராத இருதயம் உள்ளவராகச் செயல்பட்டார். தேவன் தனக்குக் கொடுத்த செய்தியை 42 ஆண்டுகள் பிரசங்கித்துர்வந்தார். ஆனால் தன்னுடைய 42 வருடகால ஊழியத்தில் ஒரு ஆத்துமாகூட மனந்திரும்பவில்லை. அவனுடைய குடும்பம் இவரைப் புறக்கணித்தது, கள்ளத் தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் இவரைப் பரியாசம்பண்ணினார்கள், சேறுநிறைந்த குழிக்குள் தள்ளனார்கள், அரசியல் தலைவர்கள் இவரை சிறையில் அடைத்தார்கள். தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கித்ததற்கு இவருக்குக் கிடைத்த பரிசுகளும், பலன்களும் இவைகள்தான். ஏசாயாவுக்குப் பிறகு சுமார் 100 ஆண்டுகள் கழித்து எரேமியா வந்தவராவார். எரேமியா புத்தகத்தின் கடைசி அதிகாரம் அவருடைய எழுத்தாலரால் சேர்க்கப்பட்டதாகும். எனவே, அந்த அதிகாரம் அவருடைய மரணத்திற்குப்பிறகு கி.மு.560களில் சம்பவித்த விபரங்களைக் கொடுக்கிறது. ராஜா எரேமியாவிடம் ஆலோசனை கேட்பார், ஆனால் அவரால் கொடுக்கப்பட்ட ஆலோசனைக்கு எதிராகச் செயல்படுவார். ஒருமுறை, அவரால் எழுதியனுப்பப்பட்ட தேவனுடைய வார்த்தைகளை ராஜா முழுயைமாக வாசித்துவிட்டு, பிறகு அதைத் துண்டுதுண்டாக வெட்டியெறிந்தார்.

முதல் 35 அதிகாரங்களில் தேவனுடைய குணாதிசயங்களைக் குறித்து எரேமியா சொல்கிறார்.

  1. எரே-1: 8, 19 உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன், உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்
  2. எரே-2: 13 ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை.
  3. எரே-3: 12 நான் கிருபையுள்ளவரென்று கர்த்தர்
  4. எரே-4: 28 அதை நிர்ணயம் பண்ணினேன், நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை, நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை.
  5. எரே-5: 22 எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ.
  6. எரே-6: 30 கர்த்தர் அவர்களைத் தள்ளிவிட்டார்.
  7. எரே-7: 16, 11: 14 நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம், அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம், என்னிடத்தில் அவர்களுக்காகப் பரிந்துபேசவும் வேண்டாம், நான் உனக்குச் செவிகொடுப்பதில்லை.
  8. எரே-8: 7 என் ஜனங்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள்.
  9. எரே-9: 24 பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான்.
  10. எரே-10: 7 ஜாதிகளின் ராஜாவே, எரே-10: 10 கர்த்தரோ மெய்யான தெய்வம், அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா, எரே-10: 16 சர்வத்தையும் உருவாக்கினவர்.
  11. எரே-11: 20 உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதி.
  12. எரே-12: 1 தேவரீர் நீதியுள்ளவராமே.
  13. எரே-14: 8 இஸ்ரவேலின் நம்பிக்கையே, ஆபத்துக்காலத்தில் அதின் இரட்சகரே.
  14. எரே-20: 11 கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார்.
  15. எரே-32: 18 சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள மகத்துவமும் வல்லமையுமுள்ள தேவன்.

முதல் 35 அதிகாரங்களில் மனிதனுடைய குணாதிசயங்களைக் குறித்தும் எரேமியா சொல்கிறார்:

  1. எரே-2: 23 நான் தீட்டுப்படவில்லை, நான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? பள்ளத்தாக்கிலே நீ நடக்கிற மார்க்கத்தைப் பார், நீ செய்ததை உணர்ந்துகொள், தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண்ணொட்டகம் நீ.
  2. எரே-4: 4,14 நீங்கள் கர்த்தருக்கென்று உங்களை விருத்தசேதனம்பண்ணி, உங்கள் இருதயத்தின் நுனித்தோலை நீக்கிப்போடுங்கள். 14. நீ இரட்சிக்கப்படும்படிக்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பறக் கழுவு.
  3. எரே-5: 7 நான் திருப்தியாக்கின அவர்கள் விபசாரம்பண்ணி, வேசிவீட்டிலே கூட்டங்கூடுகிறார்கள். (திருப்தி மனிதனைப் பாவத்திற்குள் செல்லவைக்கிறது)
  4. எரே-5: 31 தீர்க்கதரிசிகசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள், ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள், இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது.
  5. எரே-6: 16 வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.
  6. எரே-7: 8 இதோ, ஒன்றுக்கும் உதவாத பொய்வார்த்தைகளை நீங்கள் நம்புகிறீர்கள்.
  7. எரே-7: 23-24 என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மை உண்டாகும்படிக்கு நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன். 24. அவர்களோ அதைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும்போய், தங்கள் பொல்லாத இருதயத்தின் யோசனைகளின்படியும் கடினத்தின்படியும் நடந்து, முன்னிட்டல்ல, பின்னிட்டே போனார்கள் (கீழ்படியாமை).
  8. எரே-9: 6 கபடத்தின் நடுவிலே குடியிருக்கிறாய், கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோம் என்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  9. எரே-11: 15 பொல்லாப்பு நடக்கும்போது நீ களிகூருகிறாயே.
  10. எரே-12: 8 என் சுதந்தரம் காட்டிலுள்ள சிங்கத்தைப்போல் எனக்காயிற்று, அது எனக்கு விரோதமாய் கொர்ச்சிக்கிறது.
  11. எரே-18: 12 நாங்கள் எங்கள் யோசனைகளின்படியே நடந்து, அவரவர் தம்தம் பொல்லாத இருதயத்தினுடைய கடினத்தின்படியே செய்வோம் என்கிறார்கள்.
  12. எரே-22: 21 நீ சுகமாய் வாழ்ந்திருக்கையில் நான் உனக்குச் சொன்னேன், நீ கேளேன் என்கிறாய், உன் சிறுவயது முதல் நீ என் சத்தத்தைக் கேளாமற்போகிறதே உன் வழக்கம்.

எரேமியாவின் புத்தகம், இஸ்ரவேலின் முரட்டாட்டத்தை மையப்படுத்துகிறது. இஸ்ரவேலர்கள் தேவனுடைய உடன்படிக்கையை தள்ளிவிட்டார்கள் என்ற உண்மை அதிகமாக வலியுறுத்திக் காட்டப்பட்டுள்ளது. தேவன் தங்களை சிறையிருப்பிற்குள் கொண்டுசெல்லமாட்டார் என்று அந்தமக்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். அப்படியிருந்தும், மனந்திரும்புதலுக்கான அழைப்பை, தேவன் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கிறார். தேவனுடைய இரக்கத்தையும் அன்பையும் இது வெளிப்படுத்துகிறது.

எரேமியா புத்தகத்தின் தொகுப்பு:

(மொத்தம் 52 அதிகாரங்கள் உள்ளன. 52ஆவது அதிகாரத்தைத் தவிர மற்ற அனைத்து அதிகாரங்களும் எரேமியாவால் எழுதப்பட்டவைகளாகும்).

  1. அதிகாரம் -1 ஊழியத்திற்கான அழைப்பு
  2. அதிகாரம் 2 முதல் 20:யூதாவுக்கு விரோதமான அறிவித்தல்கள்
  3. தேவனுடைய அங்கலாய்ப்பு (2)
  4. இரக்கம் கூட்டிக் கொடுக்கப்படுதல் (3 முதல் 4: 4)
  5. நியாயத்தீர்ப்பின் வாக்கியங்கள் (4: 5 முதல் 6)
  6. ஏமாற்றுதலை மக்கள் நம்புதல் (7-9)
  7. தேவனைக்குறித்து விவரித்தல் (10)

10: 6 கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை, நீரே பெரியவர், உமது நாமமே வல்லமையில் பெரியது.

எரே-10: 10 கர்த்தரோ மெய்யான தெய்வம், அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா.

எரே-10: 11 வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்து போகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.

எரே-10: 12 அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்.

  1. உடன்படிக்கை முறிக்கப்படுதல் (11)
  2. எரேமியாவின் கேள்வியும் கர்த்தரின் பதிலும் (12)

எரே-12: 1 கர்த்தாவே, உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே, ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன், ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ் செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?

8. இரக்கம் காட்டாமல் நியாயத்தீர்த்தல் (13-16)

  1. யூதாவின் பாவங்கள் (17-18)
  2. பஸ்கூரின் கண்டித்தல் (20)

III. அதிகாரங்கள் 21 முதல் 28:யூதாவின் தலைவர்களுக்கும் மக்களுக்கும் விரோதமான அறிவித்தல்கள்.

† எருசலேம் மற்றும் ராஜவம்சத்திற்கு விரோதமாக (21-22)

† மதத்தலைவர்களுக்கு விரோதமாக (23)

† சிறையிருப்பிற்குள் சென்றால் காக்கப்படுதல், செல்லாவிட்டால் கெட்டுப்போதல் (24)

† தேசத்தின்மீது 70 வருட நியாயத்தீர்ப்பு (25)

† நுகங்களும் கட்டுக்களும் (26-28)

  1. அதிகாரங்கள் 29 முதல் 33:வருங்காலத்தைக்குறித்த நம்பிக்கை:
  2. சிறையிருப்பில் இருந்தோருக்கு ஆறுதலின் நிரூபம் (29)
  3. இஸ்ரவேலும், யூதா வும் புதுப்பிக்கப்படுதல் (30)
  4. புதிய உடன்படிக்கை (31)
  5. தேசத்திற்குத் திரும்பிவருதல் (32)
  6. மகிழ்ச்சியின் சத்தம் (33)

எரே-33: 11 இன்னும் களிப்பின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணவாளனின் சத்தமும், மணவாட்டியின் சத்தமும்: சேனைகளின் கர்த்தரைத் துதியுங்கள், கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், கர்த்தருடைய ஆலயத்துக்கு ஸ்தோத்திர பலிகளைக் கொண்டு வருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவர்கள் முன்னிருந்தது போலிருக்கும்படி தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

  1. அதிகாரங்கள் 34-36:கீழ்படியாமை இல்லாதிருத்தல்

† எரே-35: 2,5,6,7,9,10, நீ ரேகாபியருடைய வீட்டுக்குப்போய், அவர்களோடே பேசி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தின் அறைகளில் ஒன்றிலே அழைத்துவந்து, அவர்களுக்குத் திராட்சரசம் குடிக்கக்கொடு என்றார். 5. திராட்சரசத்தினால் நிரப்பப்பட்ட குடங்களையும் கிண்ணங்களையும் ரேகாபியருடைய குடும்பத்தைச் சேர்ந்த புத்திராின் முன்னேவைத்து, அவர்களை நோக்கி: திராட்சரசம் குடியுங்கள் என்றேன். 6. அதற்கு அவர்கள்: நாங்கள் திராட்சரசம் குடிக்கிறதில்லை, ஏனென்றால், ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாப், நீங்கள் பரதேசிகளாய்த் தங்குகிற தேசத்தில் நீடித்திருக்கும்படிக்கு, 7. எங்களுக்குக் கட்டளையிட்டார். 9. ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாபின் சத்தத்துக்குக் கீழ்ப்படிந்து இருக்கிறோம். 10. எங்கள் தகப்பனாகிய யோனதாப் எங்களுக்குக் கட்டளை இட்டபடியெல்லாம் கீழ்ப்படிந்து செய்துவந்தோம் என்றார்கள்.

எரே-34: 14 திராட்சரசம் குடியாதபடிக்கு, ரேகாபின் குமாரனாகிய யோனதாப் தன் புத்திரருக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் கைக்கொள்ளப்பட்டு வருகிறது, அவர்கள் இந்நாள்மட்டும் அதைக் குடியாமல், தங்கள் தகப்பனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள், ஆனாலும் நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக் கொண்டேயிருந்தும், எனக்குக் கீழ்ப்படியாமற் போனீர்கள்.

† ராஜாவும் புஸ்தகச் சுருளும் (36)

  1. அதிகாரங்கள் 37 முதல் 45:எருசலேமும் ஜனங்களும் அழிக்கப்படுதல்

† எகிப்திற்குப் போகவேண்டாம் என்று தேவன் தடுத்தபோதிலும், அவர்கள் அங்கே சென்று ஏமாற்றமடைந்தார்கள். எரேமியா துரவுக்குள் போடப்பட்டார்.

† எருசலேமின் வீழ்ச்சி (39)

† பாருக்கிற் குரிய ஆசீர்வாதம் (45)

எரே-45: 2-5 பாருக்கே, உன்னைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், 3. நீ: இப்பொழுது எனக்கு ஐயோ! கர்த்தர் என் நோவைச் சஞ்சலத்தால் வர்த்திக்கப் பண்ணினார், என் தவிப்பினால் இளைத்தேன், இளைப்பாறுதலைக் காணாதேபோனேன் என்று சொன்னாய் என்கிறார். 4. இதோ, நான் கட்டினதையே நான் இடிக்கிறேன், நான் நாட்டினதையே நான் பிடுங்குகிறேன், இந்த முழுத்தேசத்துக்கும் இப்படியே நடக்கும். 5. நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே, இதோ, மாம்சமான யாவர்மேலும் தீங்கை வரப்பண்ணுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆனாலும், நீ போகும் சகல ஸ்தலங்களிலும் உன் பிராணனை உனக்குக் கிடைக்கும் கொள்ளைப் பொருளாகத் தருகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று அவனுடனே சொல் என்றார்.

VII. அதிகாரங்கள் 46 முதல் 51:பிற தேசங்கள்மீது நியாயத்தீர்ப்பு அறிவிக்கப்படுதல்:

  • பத்து தேசங்கள்மீது தேவன் தம்முடைய நியாயந்தீர்க்கும் செய்கையை அறிவிக்கிறார்.

எரே-49: 34 ஏலாமுக்கு விரோதமாக எரேமியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டான கர்த்தருடைய வசனம். (ஏலாம் என்பது இப்போதைய ஈரானைக் குறிக்கிறது).

எரே-50: 1 பாபிலோனுக்கும் கல்தேயா; தேசத்துக்கும் விரோதமாக உரைத்த வசனம்: (பாபிலோன் என்பது இப்போதைய ஈராக்கைக் குறிக்கிறது).

VIII. அதிகாரம் 52: பிற்சேர்க்கை:

  1. எருசலேம் சிறைபிடிக்கப்படுதல் (52: 1-11)
  2. எருசலேம் அழிக்கப்படுதல் (52: 12-23)
  3. பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்படுதல் (52: 24-30)
  4. யோயாக்கீன் ராஜாவின் பிரசன்னத்தில் இருப்பதற்கு அனுமதிப்படுதல் (52: 31-34)

(யோயாக்கீனுக்குக் காண்பிக்கப்பட்ட தயை கிருபை வெளிப்படுத்துகிறது)

நியாயத்தீர்ப்பு வருவதற்குள் மனந்திரும்பிட வேண்டும் என்பதை இந்தப் புத்தகம் நமக்குப் போதிக்கும் சத்தியமாக இருக்கிறது.