எண்ணாகமம் - "வனாந்தரத்தில் இஸ்ரவேலரின் 40 ஆண்டு பயணம்; கசப்பு மற்றும் கலகம்"
முகவுரை:
இந்தப் புத்தகத்திற்குரிய எபிரேயப் பெயர் “b’midbar”. இதற்கு “வனாந்திரத்தில்” என்று அர்த்தமாகும். இரண்டுமுறை இஸ்ரவேல் புத்திரர்களின மக்கள்தொகை எண்ணப்பட்டதால் இது எண்ணாகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. முதல்முறை எண்ணப்பட்டதைக் குறித்து எண் 1-2 அதிகாரங்களில் பார்க்கிறோம். யுத்தத்திற்குப் போகத்தக்கவர்களாக 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணப்பட்டார்கள். யாத்-12: 37ன்படி எகிப்தைவிட்டுப் புறப்பட்டபோது 6 லட்சம் புருஷர் வந்தார்கள். முதல் கணக்கெடுப்பில் மொத்தம் 6 லட்சத்து 3550 பேர் எண்-2: 32 இவர்களே தங்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல் புத்திரால் எண்ணப்பட்டவார்கள். பாளயங்களிலே தங்கள் தங்கள் சேனைகளின்படியே எண்ணப்பட்டவார்கள் எல்லாரும் ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள்.
மீண்டும் 39 ஆண்டுகளுக்குப் பிறகு 2ஆவது முறை எண்ணப்படுதல் நடைபெற்றது. அதைக்குறித்து எண்-26ல் பார்க்கிறோம். அப்பொழுது 6 லட்சத்தது 1730 பேர் இருந்தார்கள். எண்-26: 51 இஸ்ரவேல் புத்திரால் எண்ணப்பட்டவார்கள் ஆறுலட்சத்தோராயிரத்து எழுநூற்று முப்பது பேராயிருந்தார்கள். இந்த 40 வருட இடைவெளியில் எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் இல்லை. எண்ணிக்கையில் அவர்கள் பெருகவில்லை என்றாலும், 40 வருட இடைவெளியில், தேவன்மீதுள்ள விசுவாசத்தில் பெருகியிருந்தார்கள். இந்த எண்ணப்படுதலில் லேவியர்கள் உள்ளடக்கப்படவில்லை. அவர்கள் தேவனுக்கென்று வேறு பிரிக்கப்பட்டவர்களாக இருந்ததால். அவர்களை மற்ற யாவரோடும் பொதுவாக தேவன் பார்க்கவில்லை. லேவியர் தனியாக எண்ணப்பட்டபோது முதல் எண்ணிக்கையில் 22,000மாக இருந்தவர்கள் (எண்-3: 39), இரண்டாவது எண்ணிக்கையில் 23,000மாக அதிகரித்திருந்தார்கள் (எண்-26: 62). எப்போதுமே தேவனுக்கு ஊழியம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கவேண்டும் என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது.
முதலாவது எண்ணப்பட்டது பழைய சந்ததி, இரண்டாவது எண்ணப்பட்டது புதிய சந்ததி. பழைய சந்ததி வாக்குத்தத்த தேசத்தைச் சுதந்தரிக்கத் தகுதியிழந்த மாம்ச சந்ததியாகும். அவிசுவாசம், கீழ்படியாமை மற்றும் முறுமுறுப்புக்கு இடம்கொடுத்து வனாந்தரத்திலே அழிக்கப்பட்டார்கள். (இது நம்முடைய பழைய மனிதனைக் குறிக்கிறது). தேவன் இஸ்ரவேலரில் புதிய சந்ததியை எழுப்பி அவர்களைத்தான் கானானுக்குள் பிரவேசித்து, வாக்குத்தத்த தேசத்தைச் சுதந்தரிக்க வைத்தார் (இது நம்முடைய புதிய மனிதனைக் குறிக்கிறது).
எண்ணாகமத்தின் நோக்கம்:
- சரிபார்த்திட: ஆபிரகாமின் வம்சத்தில் வந்தவர்களை சரிபார்த்திட. கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்கான வாக்குத்தத்தம் ஆபிராகமுக்கும், அவருடைய சந்ததிக்கும் அளிக்கப்பட்டிருந்தது
- அடையாளத்திற்காக: ஒவ்வெரு நபரும் கணக்கில் ஏற்றப்பட்டார். நம் ஒவ்வொருவரைக் குறித்தும் தேவன் கணக்கில் வைத்திருக்கிறார். நீங்கள் யார் என்பதும், எங்கே இருக்கிறீர்கள் என்பதும் அவருக்குத் தெரியும்.
- பிரித்தெடுத்திட: உண்மையான எபிரேயர்கள் பிரித்தெடுக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டனர்
- ஒருங்கிணைத்திட: யுத்தத்திற்குப் போகத்தக்கவர்கள் யார் என்று அறிந்து, அவர்கள் ஆயத்தப் படுத்தப்பட்டார்கள். எல்லாரும் யுத்தத்திற்குச் செல்லமுடியாது. அதற்குரிய தகுதியும் வேண்டும்.
எண்ணாகமத்தின் தொகுப்பு:
3 பகுதிகளாக நாம் பிரிக்கலாம்
- அதிகாரங்கள் 1 முதல் 9: சீனாயில்
↣முதலாவது எண்ணப்படுதல் (1-3)
↣லேவியரின் கடமைகள் (4)
↣சுத்திகரிப்பு (5)
↣நசரேய விரதம் (6)
↣அதிபதிகளின் காணிக்கைகள் (7)
↣லேவியரின் சுத்திகரிப்பு (8)
↣இரண்டாம் பஸ்கா (9)
- அதிகாரங்கள் 10 முதல் 19: சீனாயிலிருந்து காதேஸ் பாரான் வனாந்தரத்தில்:
∗எக்காளங்கள் உண்டாக்கி பயணத்தைத் தொடர்ந்தார்கள்
∗இறைச்சி கேட்டு, இஸ்ரவேலர்களின் முறுமுறுப்பு
∗மோசேக்கு விரோதமாக ஆரோன் மற்றும் மீரியாமின் முறையிடுதல் (12: 1-2 கர்த்தர் அதைக் கேட்டார்)
∗12 வேவுக்கார்கள் அனுப்பட்டது (அது தேவதிட்டமல்ல, மனித திட்டமாகும். உபா-1: 22, 23 அப்பொழுது நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து: நமக்காக அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கவும், நாம் இன்னவழியாக அதில் சென்று, இன்ன பட்டணங்களுக்குப் போகலாம் என்று நமக்கு மறுசெய்தி கொண்டுவரவும், நமக்கு முன்னாக மனிதரை அனுப்புவோம் என்றீர்கள். அது எனக்கு நன்றாய் கண்டது, கோத்திரத்திற்கு ஒருவனாகப் பன்னிரண்டு மனிதரைத் தெரிந்தெடுத்து அனுப்பினேன்).
∗துர்செய்தியின் விளைவு, மக்கள் புலம்பி எதிர்த்தார்கள்: (ஆனால் காலேபும் யோசுவாவும்)
∗கோராகு தாத்தானையும் ஓனையும் சேர்த்துக்கொண்டு மோசேக்கு விரோதமாக எழும்புதல்
∗ஆரோனின் துளிர்த்தகோல் (முறுமுறுப்புக்கு முடிவு, அதி-17)
∗ஆசாரியரின் கடைமைகளும், சுத்தகரிப்பு முறைமைகளும்; (18-19)
III. அதிகாரங்கள் 20 முதல் 36: காதேஸ் பாரான் வனாத்தலிருந்து மோவாப் வரை:
⋇கற்பாறைய அடித்தலும், ஆரோனின் மரணமும் (அதி-20) (மோசேயின் கோபம் தேவனுடைய வாக்குத்தத்தைச் சுதந்தரிக்க முடியாதவனாகத் தள்ளப்படுதலுக்குக் காரணமாயிற்று. எண்-20: 12 பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திராpன் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம் பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டு போவதில்லை என்றார்.
⋇கானானியர்கள், வெண்கல சர்ப்பம், சீகோனும்-ஓகும் (அதி-21) எண்-21: 5, 6 ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப் பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை, இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள். அப்பொழுது கர்த்தர் கொள்ளிவாய்ச் சாப்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார், அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள்.
⋇பாலாகும் பிலேயாமும் (அதி 22-24). 25ஆம் அதிகாரத்தில் இஸ்ரவேலர் பாவத்தில் விழுதலைக் குறித்துப் பார்க்கிறோம். ஆதற்குக் காரணம் பிலேயாம் கொடுத்த விக்கிரகம் மற்றும் வேசித்தனத்திற்கு ஏதுவான துர்ஆலோசனை. வெளி-2: 14 விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக் கொள்ளுகிறவார்கள் உன்னிடத்திலுண்டு. எண்-31: 16 பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாய் இருந்தவார்கள் இவார்கள்
⋇இரண்டாவது எண்ணப்படுதல் (புதிய சந்ததி, அதி -26)
⋇யோசுவா தலைமைத்துவப் பொறுப்பில் அமர்த்தப்படுதல் ( அதி -27)
⋇காணிக்கைகளும் பொருத்தனைகளும் (அதி 28-30)
⋇மீதியானியர்கள்மீது பழிவாங்குதல், யோர்தானுக்குக் கிழக்கே கோத்திரப் பகுதி (அதி 31-36)
நம்முடைய பாவம் தேவகோபத்தை எழுப்புகிறது, நம்முடைய உறவு தேவகட்டுப்பாட்டை எழுப்புகிறது, நம்முடைய பாவஅறிக்கை தேவஇரக்கத்தை எழுப்புகிறது.
எண்ணாகமத்தில் இயேசு
1கொரி-10: 4 எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள், அந்தக் கன்மலை கிறிஸ்துவே.
யோவா-3: 14, 15 சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.