ஆதியாகமம்

ஆதியாகமம் - "ஆரம்பங்களின் புத்தகம்."

முகவுரை

ஆதியாகமத்திலே முக்கியமான 7 ஆரம்பங்களையாவது நாம் பார்க்கலாம். தேவனே சர்வத்தையும் படைத்து, இயக்குகிற ராஜா என்பதை இது முக்கியப்படுத்துகிறது. தோராயமாக 2200 வருடகாலத்து சரித்திரத்தை இது உள்ளடக்குகிறது. ஆதியாகமம் புதியஏற்பாட்டிலே 42 முறை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

உலகத்தின் ஆரம்பம்

  1. (ஆதி 1: 1-2. ஆறு நாட்களில் தேவன் உலகத்தில் உள்ளவைகளைப் படைத்த விதம்)

2.மனிதனின் ஆரம்பம்

3.பாவத்தின் ஆரம்பம்

ஆதாமின் கீழ்படியாமை- தேவன் கொடுத்த தற்காலிக மீட்பு: தோள் உடைகள். (வரவிருந்த இயேசு இரத்தம்சிந்தி முழு மனுக்குலத்திற்கும் நித்தியமீட்பை உண்டுபண்ணுவார் என்பதற்கான முன்அடையாளம்)

4.குடும்பத்தின் ஆரம்பம்

ஆதி-2: 24 இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான், அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.

5.சாபத்தின் ஆரம்பம்

6.உடன்படிக்கையின் ஆரம்பம் (நோவாவோடு, ஆபிரகாமோடு)

நோவாவோடு முதல் உடன்படிக்கை:

ஆதி-6: 18 ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன், நீயும், உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள்.

ஆதி-9: 10,11 உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள் முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள் பரியந்தம், பறவைகளோடும், நாட்டு மிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டு மிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன். இனி மாம்சமான வைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப் படுவதில்லை என்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லை யென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார். இனிமாம்சமான வைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப் படுவதில்லை என்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லை யென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார். (மத்-24: 37 நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள், அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்). இது மனிதன் அக்கிரமத்தில் பெருகுதல், மனந்திரும்ப மறுத்தலைக்குறித்த முன்னறிவித்தலாகும், வெள்ளத்தால் வரும் அழிவைக்குறித்தது அல்ல.

ஆபிரகாமோடு நித்திய உடன்படிக்கை:

ஆதி-15: 18 அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி,

ஆதி-17: 7 உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.

7. இஸ்ரவேல் தேசத்தின் ஆரம்பம் (12 கோத்திரங்கள்: ரூபன் முதல் பென்யமீன் வரை)

ஆதியாகமத்தின் தொகுப்பு

  1. முதல் பிரிவு (ஆதியாகம் 1-11)சிருஷ்டிப்பும், வீழ்ச்சியின் காலமும் (கி.மு.4000 முதல் 2234 வரை)
  • உலகத்தின் படைப்பு (அதி 1-2 தேவன் 6 நாட்களில் படைத்து 7ஆம் நாள் ஓய்ந்திருந்தார்)
  • ஆதாம் ஏவாளின் வீழ்ச்சி (அதி-3 பாவமும், மரணமும் உலக்திற்குள் பிரவேசித்தது)
  • பெருவெள்ளமும் பேழையும் (அதி 6-9 நோவவாவும் அவருடைய குடும்பமும்: அதிகாரம்-10, சேம் காம், யாப்பேத் வழியாக பூமியின் வம்சங்கள் உருவாகுதல்)
  1. சேம்: இவருடைய 5 குமாரர்கள் மூலம் ஆசியா கண்டத்து மக்கள் இனம் உருவானது.

ஆதி-10: 22 சேமுடைய குமாரர் ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.

  1. ஏலாம்: பெர்சியர்கள் (பெர்சிய வளைகுடாவில்)
  2. அசூர்: அசீரியர்கள் (யூப்ரடீஸ் டைக்ரீஸ் நதிகளுக்கிடையே)
  3. அர்பக்சாத்: பாபிலோனியர்கள் (கல்தேயாவில்)
  4. லூத்: லீதியர்கள் (ஆசியா மைனரில்)
  5. ஆராம்: சீரியர்கள் (இஸ்ரவேலுக்கு வடக்கேயும் தெற்கேயும்)
  6. காம்: இவருடைய 4 குமாரர்கள் மூலம் ஆப்பிரிக்கா கண்டத்து மக்கள் இனம் உருவானது.

ஆதி-10: 6 காமுடைய குமாரர் கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.

  1. கூஷ்: எத்தியோப்பியர்கள் (எகிப்திற்குத் தெற்கே)
  2. மிஸ்ராயீம்: எகிப்தியர்கள் (வடகிழக்கு ஆப்பிரிக்கா)
  3. பூத்: லீபியர்கள் (வடக்கு எகிப்து)
  4. கானான்: கானானியர்கள் (மத்திய தரைக்கடலுக்குக் கிழக்கே, ஆப்பிரிக்காவுக்கு மேலே- பிறகு இது எபிரேயர்களுக்குக் கொடுக்கப்பட்டது)
  5. யாப்பேத்: இவருடைய 7 குமாரர்கள்மூலம் ஐரோப்பா கண்டத்து மக்கள் இனம் மற்றும் இந்தியா வந்த ஆரியர்கள் உருவானது.

ஆதி-10: 2 யாப்பேத்தின் குமாரர் கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.

  1. கோமர்: சிம்மேரியர்கள் (கருங்கடலுக்கு வடக்கே: ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், வேல்ஸ் மற்றும் பிரிட்டிஷ் தீவுகள்)
  2. மாகோகு: ஸ்கீத்தியர்கள் (காஸ்பியன் கடலுக்கு வடக்கே)
  3. மாதாய்: மேதியர்கள் (காஸ்பியன் கடலுக்குத் தற்கே)
  4. யாவான்: கிரேக்கர்கள் (கிரீஸ் தேசம்)
  5. தூபால்: துருக்கியர்கள் (கருங்கடலுக்குத் தெற்கே-ரஷ்யா)
  6. மேசேக்கு: ஸ்லாவியர்கள் (கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில்)
  7. தீராஸ்: எட்ரூஸியர்கள் (கருங்கடலுக்கு மேற்கே)
  8. இரண்டாவது பிரிவு: ஆதியாகமம் 12-50 முற்பிதாக்கள் (கி.மு.1996 முதல் 1689 வரை)

அ. ஆபிரகாமும் ஈசாக்கும்: (ஆதி-12: 1 முதல் 25: 18 வரை)

ஆ. யாக்கோபும் 12 புத்திரர்களும் (ஆதி-25: 19 முதல் 36 வரை)

இ. யோசேப்பு (ஆதி-37 முதல் 50 வரை)

ஆதியாகமத்தின் முக்கிய நபர்கள்

  • (ஆதாம், ஆபேல், ஏனோக்கு, நோவா, மெல்கிசெதேக்கு, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு)
  • ஏவாள் சாத்தானுடைய வார்த்தைக்கு செவிகொடுத்து, வஞ்சிக்கப்பட்டது
  • காயீன் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் இடம்கொடுத்து சகோதரனைக் கொலைசெய்தது
  • லாமேக்கு இரண்டு பெண்களை விவாகம் செய்தது, கொலை செய்தது (ஆதி4: 19,22)
  • தேவபுத்திரர் மனுஷ குமாரத்திகளோடு உறவு கொண்டதால் இரட்சத இனம் பெற்றெடுக்கப் பட்டது.
  • நிம்ரோத் தேவனுக்கு விரோதமாக பாபேல் கோபுரம் கட்ட ஒருமனப்பட்டுக் கூடியது.
  • லோத்துவின் மனைவி பின்னிட்டுப்பார்த்து உப்புத்தூணானது.
  • யோசேப்பின் சகோதரர்கள் (யோசேப்பைக் குழியில் போட்டு, அடிமையாக விற்றது)

ஆதியாகமத்தில்:

  • குடும்பத்தைக்குறித்த முதல் தீர்க்கதரிசனம் உள்ளது (ஆதி 2: 24 தாய்-தகப்பன் தோன்றுவதற்கு முன்பே, கணவன்-மனைவி எப்படி செயல்படவேண்டும் என்பதைக்குறித்து தேவன் சொன்னது).
  • சாத்தானுக்கு விரோதமான முதல் தீர்க்கதரிசனமும், சாபமும் காணப்படுகிறது.
  • தேவனுடைய பார்வையில் நோவா கிருபை பெற்று அழிக்கப்பட்டாமல் காக்கப்பட்டது.
  • விசுவாசத்தால் ஆபிரகாம் நீதிமானானது
  • அக்கிரமத்தால் சோதோம் கொமோர பட்டணங்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டது.
  • இயேசுவுக்கு அடையாளமாக ஆபிரகாம் ஈசாக்கை பலியிட முன்வந்தது.
  • கிறிஸ்துவுக்கும்-சபைக்கும் நிழலாட்டமாக ஈசாக்கு-ரெபேக்காளின் திருமண ஏற்பாடு
  • யோசேப்பு தேவனுடைய வார்த்தையால் புடமிடப்பட்டு உயர்த்தப்பட்டது.
  • யோசேப்பின் பொறுமை, மன்னிக்கும் இருதயம், தீமையின் மத்தியிலும் தேவனைப் பார்த்தல், பாவத்திற்கு விலகிஓடியது. பலர் காக்கப்படும்படி தானியம் சேர்த்து, தேவைப்பட்டபோது கொடுத்தது.

தேவ இரக்கமும் அன்பும்:

⋇தீமை என்ற ஒன்று இருக்கிறது என்பதை மனிதனுக்கு மறைக்காமல் அதற்கு விலகியிருக்குமாறு கட்டளைகொடுத்தது.

⋇கட்டளைக்குக் கீழ்படியத் தவறியபோதும், 'ஆதாமே எங்கே இருக்கிறாய்?' என்று கூப்பிட்டு, மனந்திரும்புவதற்கு அழைப்புக் கொடுத்தது.

⋇தோல் உடைகளை உண்டுபண்ணிக் கொடுத்தது.

⋇காயீனுக்கு மனந்திரும்புவதற்கு அழைப்பைக் கொடுத்தது, பாவம் என்னசெய்யும் என்பதைக் குறித்தும் எச்சரிப்புக்கொடுத்தது.

⋇மனுக்குலத்தின் இரத்தவாரிசு கறைபட்டுப் போனபோது, வரவிருந்த தண்டனையின் அழிவிற்குத் தப்புமாறு, கர்த்தர் நோவாவை எழுப்பி 100 ஆண்டுகள் பிரசங்கிக்கவைத்து மனந்திரும்புதலுக்கு அழைப்புக் கொடுத்தது.

⋇நோவாவையும் அவன் குடும்பத்தையும் பேழைக்குள் வைத்துப் பாதுகாத்ததது.

⋇ஆபிரகாமை அழைத்து பூமியின் வம்சங்கள் அனைத்திற்கும் நித்திய உடன்படிக்கையை ஏற்படுத்தியது.

⋇ஆகாரின் பிள்ளை தாகத்தால் வாடியபோது, வனாந்தரத்தில் தண்ணீர் கொடுத்தது.

⋇லேயாள் அற்பமாக எண்ணப்பட்டபோது கர்த்தரால் கனப்படுத்தப்பட்டது.

⋇யோசேப்பு பாவசோதனை வந்தபோது பாவத்தில் விழாதவாறு காக்கப்பட்டது.

ஆதியாகமத்தில் இயேசு:

ஆதாமில்: ஆதாம் முழுமனுக்கலத்தின் பாவத்திற்கும் மரணத்திற்கும் காரணமானதுபோல, இயேசு முழுமனுக்குலத்தின் மீட்பிற்கும், ஜீவனுக்கும் காரணமானார். நோவாவின் பேழையில்: பேழையாம் கிறிஸ்துவுக்குள் வருபவர்கள் பேரழிவின் நேரத்தில் காக்கப்படுவார்கள்.

ஆபிரகாமின் விசுவாசத்தில்: கிரியையினால் அல்ல, கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசத்தால் அனைவரும் நீதிமானாக்கப்படுதல்.

ஈசாக்கு பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டதில்: இயேசு, தேவ ஆட்டுக் குட்டியானவராக நமக்குப் பதிலாகப் பலியானார்.